ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதி வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்களை எடுத்தது. இவற்றில் சிறப்பாக ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் 125 (114)ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய டேவிட் மில்லர் 139 (108)ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும். ஸ்டோனிக்ஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். பின்பு தனது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தென்னாபிரிக்க ஸ்டைன் பந்து வீச்சு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன. அவற்றில் மார்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார் 102 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. 280 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. அதாவது 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழத்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியின் டெலி ஸ்டெய்ன் 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் மற்றும் ராபாடா 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.