ஆஸ்திரேலியா செர்பியா சண்டை?

கோவிட் காலத்தில் நாடு முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியிருந்த நிலையில், உலக அரங்கில் விளையாட்டு துறையில்; கோவிட் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் முன்னனி வீரர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை¸ ஆதலால் களையிழந்து போய்விட்டது ஓபன் டென்னிஸ். தடுப்பு ஊசிக்கு எதிரான கொள்கை கொண்டவரும்¸ உலக நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் டிஜோகோவிக்-ஐ ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வாரியம் தொடர்பு கொண்டு அவரை விளையாட அழைத்துள்ளது. அதற்கு அவர் வர மறுத்துவிட்டார். டிஜோகோவிக்கு மட்டுமே சிறப்பு சலுகை வழங்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்து விசா வழங்கி உள்ளது. டிஜோகோவிக் ஆஸ்திரேலியா புறப்படும் முன் தனது சமூக வலைதளமான டிவிட்டரில் உறுதிபடுத்தினார். அதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆஸ்திரேலியா சென்று அடைந்தபோது அவரை நாட்டிற்குள் நுழைய விடாமல் விசாவை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா. இவற்றை ஆஸ்திரேலிய பிரதமர் திரு. ஸ்காட் மொரிஸ்ஸன் நேரிடையாக செய்து உள்ளார்.

டிஜோகோவிக் விசா அப்ளை செய்த பொழுதே ஆஸ்திரேலியா அரசாங்கம் கேன்சல் செய்து இருந்தால் பரவாயில்லை. அவரை விளையாட வாருங்கள் என்று அழைத்துவிட்டு¸ சிறப்பு சலுகையின் பேரில் விசா வழங்கி விட்டு திடீரென கேன்சல் செய்வது எந்த விதத்தில் நியாயம்! தடுப்பு ஊசி கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்டவர் என தெரிந்தும் விசா வழங்கியது ஏன்? டிஜோகோவிக் டிவிட்டரில் பதிவிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியாவில் இறங்கி இருப்பார். ஆஸ்திரேலியா அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற மாட்டார்கள் என்பது உலக அறிந்த உண்மை. இந்த செயலுக்கு செர்பியா அரசாங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. ஆஸ்திரேலியா அரசு கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. எல்லா நாடுகளும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகுக்கு தெரிந்து விட்டால் ஒரு நடிப்பு¸ தெரியாவிட்டால் ஒரு நடவடிக்கை இதற்கு ஆஸ்திரேலியாவும் விதி விலக்கு அல்ல.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *