நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெற்றிவாகை சூடியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னால் இந்திய வீரர் மஞ்சுரேக்கர் ஆஸ்திரேலியாவின் வெற்றியை பார்த்து சந்தோஷம் அடைவதாகவும், இந்த வெற்றியின் மூலம் அவர்கள் நாடு பெருமை கொள்ளும் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாகவும், அவர்கள் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவை பாராட்டும் முன்னால் வீரர்
