ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த அதிசயம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் விண்கல் ஒன்று, ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்தபோது மிகப் பிரசமாக எரிந்துள்ளது. அப்படி வந்த விண்கல், ஒரு காரின் அளவைவிட பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா பகுதிகளில் இந்த விண்கல் தெரிந்ததாக ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகாயத்தில் இருந்து வந்த விண்கல், க்ரேட் ஆஸ்தரேலியன் பைட் கடற்பரப்பில் விழுந்தது.

விண்கல் விழுந்த சமயத்தில், அதைத் தற்செயலாக சில சிசிடிவி கேமராக்கள் வீடியோ எடுத்துள்ளன. அந்த வீடியோக்கள்தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *