பஞ்சாபில் 150 அடி ஆழ்துளை கிணற்றுக்கு சிக்கிய 2 வயது குழந்தை 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் பகவான்புரா கிராமத்தில் பதேவீர் என்ற 2 வயது குழந்தை கடந்த வியாழன் அன்று மாலையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாததால் பெற்றோர் தேட தொடக்கினார்
இறுதியில் குழந்தை பதேவீர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை போருக்குள் விழுந்தது தெரியவந்தது.
இந்நிலையில், 5 நாட்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர், இன்று காலை 5.30 மணி அளவில், தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது. குழந்தை மீட்கப்பட்ட உடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.
சம்பவ இடத்திற்கு அருகிலே மாநில அரசின் ஹெலிகாப்டர் இருந்த போதிலும், 140 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சாலை மூலமாகவே குழந்தையை அழைத்துச்சென்றனர்.