பாரதிய ஜனதா கட்சியின் அதிகார பூர்வ இணையதளமான www.bjp.org – யை ஹேக்கர்கள் நேற்று முடக்கினர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேளையில் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேக்கர்களிடம் இருந்து இணையதளத்தை மீட்கும் முயற்சியில் தொழில் நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
