தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் அதிகபட்சமாக 45 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். அதில் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். துவக்க வீரர் ஹென்ரிக் 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வரி 3 விக்கெட்களை கைபற்றினார்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் வீரர்கள் மாலிக் 49 ரன்களும், ஹுசைன் டாலட் 40 ரன்களும், பாபர் அசாம் 38 ரன்கள் எடுத்தும் அணிக்கு அது பலன் தரவில்லை.
தென் ஆப்ரிக்கா வீரர்கள் ஹென்ரிக், மோரிஸ், ஷாம்சி தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர். 10 ரன்கள் அடித்து ,நான்கு கேட்ச்கள் பிடித்து,2 ரன் அவுட்களை செய்த டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.