
ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை பிரிவு துணைத் தலைவராக செயல்பட்டு வருபவர் ஏஞ்சலா ஆரண்ட்ஸ். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். வருகிற ஏப்ரல் மாதத்துடன் அந்த பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் ஏஞ்சலா ஆரண்ட்ஸ். இவருக்கு அடுத்ததாக இந்த பதவியில் டெயிர்டே ஓ பிரைன் நியமிக்கபட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணியாற்றி வரும் டெயிர்டே ஓ பிரைன் 30 வருடங்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.