வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி கொண்டு இருக்கும் வேளையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட் ஐ பயன்படுத்தி ஆன்லைனில் வாக்கு பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் பரவியது.
தற்போது இந்த பொய்யான தகவலை மறுத்து உள்ள தேர்தல் ஆணையம் இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு தொடருந்து உள்ளது. 3.10 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.