ஆன்லைனில் மருந்து விற்பனைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்தது. அந்தத் தடையை நீக்கக் கோரி ஆன்லைன் விற்பனையாளர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிகளை வகுக்கும் வரை மருந்துகளை விற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இதுகுறித்து விசாரணை செய்தப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஆன்லைனில் மருந்து விற்பனையை உச்ச நீதிமன்றம் தடை செய்வதுவிட்டடது. இந்தத் தடையால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மருந்து விற்பனையாளர் சங்கம் கூறுகிறது.