ஆதார் எண் கேட்டால் அபராதம்

ஆதார் எண் இனி வங்கிகணக்கு மற்றும் மொபைல் எண் சேவைக்குக் கட்டாயமில்லை என்று கொண்டுவத்த சட்டதிருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசின் நலதிட்டங்களைப் பெற கட்டயம் ஆதார் எண் தேவை என்று தீர்பளித்த உச்சநீதிமன்றம் வங்கிகணக்கு மற்றும் மொபைல் எண் சேவைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என உத்தரவிட்டுள்ளது.இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்திய தந்தித்துறை சட்டம் மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்பு சட்டம் ஆகியவற்றில் இந்த சட்டம் திருத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் படி திருத்தப்பட்ட இனி வாடிக்கையாளர்களிடம் வங்கிகளும், தொலைதொடர்பு நிறுவனங்களும் அடையாள சான்றாகவோ மற்றும் கேஒய்சி இணைப்புக்கு ஆதார் எண்னை கட்டயமாக்க கூடாது எனவும் மீறிகேக்கும் வங்கி ஊழியர்கள் மீதும், தொலைதொடர்பு நிறுவன ஊழியர்கள் மீதும் ரூ.1 கோடி அபராதமும், மூன்று முதல் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் வழக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தனிநபர் விபரங்களை சேகரிப்பதற்கு முன் சமந்தப்பட்ட நபரிடம் தேவையான அனுமதியை பெற வேண்டும்.அப்படி பெறமால் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.50 லட்சம் அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். மற்றும் முறையான அறிவுறுத்தல் இல்லமால் ஆதார் எண்னை பெற்றாலும் ரூ 10,000 அபராதமும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும் கிடைக்கும். மேலும் தனிநபர் விபரங்களை அதாவது ஆதார் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டாலும் ரூ. 10,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *