முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயது வீரர் அம்ரிஸ் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 5 விக்கெட்டுகளை ரஸல் எடுத்துள்ளார். பாயின்ட்ஸ் டேபிளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆட்டம் வரும் வியாழன் அன்று வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை எதிர்கொள்கிறது.