ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் இருந்து இன்னும் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக மீளவில்லை. இப்படி இருக்கும் கூழலில் சமூக வலைத்தளங்களில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்திய-ஆஸ்திரேலிய போட்டியில் பந்தை சேதப்படுத்த முயற்சி செய்தார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

பந்துவீசுவதற்கு முன்பு, ஆடம் ஸம்பா, தன்னுடைய பாக்கெட்டுக்குள் கைவைத்து எதையோ எடுத்து பந்தில் தேய்ப்பது போன்ற வீடியோ பரவியது. பந்தை சேதப்படுத்தும் பொருட்களை தான் அவர் வைத்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்தனர். இது தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம் போலவே உள்ளது என்றும் கூறினர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *