
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு
Announcement of Teacher Eligibility Test
2019- ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இதற்கான எழுத்துத் தேர்வு, தாள் 1 மற்றும் தாள் 2 என இரு தாள்களைக் கொண்டது.
தாள் 1 எழுதுவதற்கான தகுதிகள்
பிள்ஸ் 2 தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட் பயிற்சி பெற்றவர்கள் எழுதலாம். இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். தேர்வு 150 மதிப்பெண்கள் கொண்டது.
தாள் 2 எழுதுவதற்கான தகுதிகள்
பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சிபெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்களாவார். இவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். தேர்வு 150 மதிப்பெண்கள் கொண்டது.
18 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வுக்கட்டணம்
பொது மற்றும் பி.சி பிரிவினர் ரூ.500 கட்டணமாகவும், எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http//trb.tn.nic.in/TET-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.03.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2019