ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஸ்டாலின்

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம். அவர்களை நேரில் அழைத்துப்பேசி சுமூக தீர்வுகாண முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? எனவும் கேட்டு இருந்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் இன்று திராவிட கழக அரசு அமைந்ததும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் ஊழல் அ.தி.மு.க அரசு எடுக்கும் சட்டவிரோதமான அடக்குமுறை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *