நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன்கருதி தங்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்,போராட்ட காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு கைவிடவேண்டும்.
போராட்ட நாட்களை ஈடுசெய்யும் விதமாக விடுமுறை நாட்களில் அவர்களுக்கு பணிகளை ஒதுக்கி சரிப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ஜனவரி மாத சம்பளத்தை உடனடியாக விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.