ஆசிரியர்களின் போராட்டத்தை நசுக்கும் விதமாகவும், மக்களிடம் ஆசிரியர்கள் மேல் வெறுப்பு வரும்படி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைப்போல அரசுப்பள்ளி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதில்லை மருத்துவ நீட் தேர்வு, ஐ.ஐ.டி போன்ற தேர்வுகளில் சொற்ப அரசுப்பள்ளி மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள் ஏன்?.
ஆக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்கிற குற்ச்சாட்டை தொடர்ந்து ஊடகங்களும் , சமூக செயல்பாட்டாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு.
இன்று நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கூட இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. விவாதத்தில் கலந்து கொள்பவர்களும் இந்த இடத்தில் பதில் சொல்ல முடியாமல் தினறுகின்றனர்.
அரசுப்பள்ளி களில், அதிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யார்? யார்? எந்த சூழ்நிலையிலிருந்து வந்து படிக்கிறார்கள் என்கிற விவரம்
1.தினசரி கூலிவேலை செய்வோரின் குழந்தைகள்
2.ஒரு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்வோரின் குழந்தைகள்
- முறைசாரா தொழிலாளர்களின் குழந்தைகள்
மேற்காணும் மூன்று வகையினரும் அப்பள்ளிக்கூடத்தைப் பொருத்து வசதியான
குடும்பத்தைச்சார்ந்தவர்களாக மற்ற மாணவர்களால் கருதப்படக்கூடியவர்கள்
4. பெற்றோர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேறு ஊர்களிலிருந்து வந்து இந்த ஊரில் வசிப்பவர்களின் குழந்தைகள்.
- வேறு ஊர்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் சொந்த ஊரிலேயே உறவினர்களின் உதவியோடு வாழும் குழந்தைகள்.
- தாய் தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்த ஏழைக்குழந்தை.
- தந்தை வேறு பெண்ணுடன் சேர்ந்து வேறு ஊரில்வாழுவான், அதானால் தாயுடன் மட்டும் வாழும் ஏழைக்குழந்தை.
- தாய் வேறு ஆணுடன் வேறு ஊரில் சென்று வாழ்வார்.
குழந்தை தந்தையுடன் இருக்கும்.
- தாய், தந்தை இருவரும் இருவேறுடன் இருவேறு இடங்களில் வாழ்வார்கள் , குழந்தைகள்ஏழை தாத்தா , பாட்டியுடனோ அல்லது சித்தி , பெரியம்மாவுடனோ வாழும் குழந்தைகள்.
- தாய் முதலில் ஒரு கணவனுடன் வாழ்ந்து பெற்றகுழந்தையின் பிறப்புச்சான்றிதழில் முதல்கணவன் பெயர் இருக்கும். ரேசன்கார்டில் கார்டில் தற்போதைய கணவன் பெயர் இருக்கும் குழந்தை.
மேற்காணும் மாணவர்களுக்குத்தான் கற்பிக்கவேண்டும்.இந்த மாணவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
காலை பள்ளிக்குப்புறப்படும் முன்புவரை தாய், தந்தை செய்யும் வேலைக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். வயலுக்குப் போவது ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது உணவு சமைக்க உதவுவது போன்ற வேலைகளில்ஈடுபடுவது. மாலையில் கால்நடைகளை அடைப்பது அவைகளுக்கு இலை தலைகள், புற்கள் எடுத்து வருவது போன்ற பணிகளை செய்திடுகிறார்கள். பள்ளி முடிந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால், பள்ளிக்கூடம் தேடிவந்து சண்டை போடும் பெற்றோர்களும் உண்டு.
அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பார்த்தால் பெரும்பாலும் ஓரளவேனும் படித்த பெற்றோர்கள் நடுத்தரம் மற்றும் அதைவிட கூடுதல் பொருளாதாரம் கொண்ட மாணவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் குழந்தை வரை படிக்கிறார்கள். என்ன படிக்க வேண்டும்,எப்படி படிக்க வேண்டும்,எங்கு படிக்க வேண்டும்என திட்டமிட்டு படிக்கிறார்கள். தன் குழந்தைகளின் படிப்பிற்காக எந்த தியாகமும் செய்யதயாராக இருப்பவர்கள் இப்பொழுது சொல்லுங்கள் இரண்டு தரப்பு மாணவர்களையும் எப்படி ஒப்பிடமுடியும்.
இந்த ஒப்பீட்டை ஆசிரியர்கள் பரப்ப வேண்டும்.ஆசிரியர்கள் பற்றி வரும் தவறான செய்திகளை கண்டும் காணதது போல போகாமல் விளக்கம் தரவேண்டும். பொது மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் அதை நாம் பெறுவதற்க தன்னிலை விளக்கம் தருவது அவசியம்.மெக்கானிக் அல்லது மெக்கானிக்கல் பொறியாளர் திறமையானவராக இருக்கலாம் .ஆனால் ஒர்க்ஷாப்பிற்கு வருவது பழுதடைந்த வண்டிகளே! ஒர்க்ஷாப்பில் உள்ள பொறியாளரிடம் போய் நீ சரிபார்த்து தரும் கார்கள் புது கார்கள் போல இல்லை ஆக நீ சரியாக வேலை செய்யவில்லை என்று யாராவது கேட்போமா? அதுபோலத்தான் இதுவும்.
1.தேர்தல் பணி
2.மக்கள் கணக்கெடுப்பு.
3.5+கணக்கெடுப்பு.
4.மூவகை சான்றுச வாங்கித் தருதல்.
5.இலவச பேருந்து பயண அட்டை.
6.இலவச புத்தகம், இலவச ஏடு வழங்குதல்.
7.இலவச புத்தகப்பை.
8.போக்குவரத்து காவலர் பணி.
9.மடிகணினி வழங்குவது.
10.மிதிவண்டி வழங்குவது.
- வங்கிக்கணக்கு தொடங்குதல்.
- பள்ளி மாணவர்களுக்கான செவிலியர்.
13.உதவித்தொகை பெற்று வழங்குவது.
14.மாணவர்கல்வி மேலாண்மை திட்டம்.
15.மாணவர் வாழ்வொளித் திட்டம்
16.நாட்டு நலப்பணித் திட்டம்.
- பசுமைப் படை.
18. இளம் செஞ்சிலுவைப் படை.
- பல்வகை மன்ற செயல்பாடுகள்
20.பல் வகை போட்டிகள் நடத்துதல், கூட்டிச் செல்லுதல்
21.மின்னனு படிப்புதவித் தொகைத் திட்டம்.
இவற்றை எல்லாம் செய்யும் போது மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படாது. ஆனால் நமக்கு நாமே திட்டம் போல நம் உரிமைக்காக நாம் போராட்டம் நடத்தினால் மட்டும் மாணவர் கல்வி பாதிக்கப்படுமா?
உண்மையான சிக்கல் என்ன ?
CPS திட்டத்தில் – 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.17 வருடத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை …
கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் நீக்கம்…
LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேஸ்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது – வேலை பளுவை தருமே தவிர _ கல்வி சூழலை மீட்க போவதில்லை.
ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு – ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் . தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7ஆசிரியர்கள் உள்ளனர். இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன. 5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு – 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .
தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் அரசு ஊக்குவிப்பு கல்வி வழங்கும் – எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.இந்த கோரிக்கைகளை மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது – ஜனநாயக திணிப்பு அரசியல் .
கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.
இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் – பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்.