
ஆசிய கோப்பை கண்ணோட்டம்.
வேகப்பந்து வீச்சில் ஐசிசின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பும்ரா உடன் புவனேஷ்குமார் உள்ளர். துபாயில் உள்ள ஆடுகளங்களில் பந்து ஒரளவு ஸ்விங் ஆகும் .என்பதல் இவரின் பந்துவீச்சு எடுபடக்கூடும்.
இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் உடன் குசால் பெண்டிஸ்,குசால் பெரரா,டிங்வில்லா பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர் இவர்கள் இத்தொடர் முழுவதும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். வேகபந்து வீச்சில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள மலிங்கா உடன் திசரா பொரா உள்ளார். திசரா பொரா பேட்டிங்லும் நல்ல நிலையில் இருப்பது இலங்கை அணிக்கு மகிழ்ச்சியான விழயமாகும்.
எளிதில் கணிக்க முடியாத அணியாக விளங்கும் பங்களாதேஷ் அணியின் பேட்டிங்-ல் கேப்டன் மோர்தசா,தகிம் இக்பால்,மகமதுல்லா சிறப்பான நிலையில் உள்ளனர். தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த ஒரு நாள் போட்டியின் ஆல் ரவுண்டர் சகிப் அல்ஹசன் அந்த அணியில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.வேகப்பந்து வீச்சில் முஸ்டிகா ரகிம், ருபில் காத்து கொண்டு உள்ளனர்.
தற்போது துபாய் மற்றும் அபுதாபியில் கடுமையான வெயில் நிலவுகிறது. அனைத்து ஆட்டகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுவதால் மின்னொளியின் கீழ் பேட்டிங்செய்வது கடினமாக இருக்கும் எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பும்.
வேகம் குறைந்த இங்குள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு எடுபடும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்கும். போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஓளிபரப்பு செய்கிறது.