கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
14 வது ஆசிய கிரிக்கெட் கோப்பையின் துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஐசிசியின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவை ஹாங்காங் சமாளிக்குமா என்பது சந்தேகமே. கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் ரோஹித் ஷர்மா கேப்டனாக இத்தொடரில் செயல்படுவார்.
நாளை பாகிஸ்தான் உடன் போட்டி இருப்பதால் பந்து வீச்சாளர் பும்ராக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவருக்கு பதிலாக வேகபந்து வீச்சாளர் கலீல் அஹமது அறிமுக போட்டில் களமிறங்கலாம். அம்பதி ராய்டு, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் இவர்களில் எவரேனும் இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டில் மின்னொளியில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்ஐ தேர்வு செய்யும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.