ஆசியாவின் சிறந்த இளைஞர்?

2019  ஆம்  ஆண்டுக்கான  காமன்வெல்த்  அமைப்பின்  ஆசிய பிராந்தியத்துக்கான  சிறந்த  இளைஞர்  விருதை  தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் என்ற இளைஞர்  வென்று சாதனை படைத்துள்ளார்.  ஆசியா, பசிபிக்,  கரீபியன்,  அமெரிக்கா,  ஐரோப்பா  மற்றும்  ஆப்பிரிக்கா  ஆகிய பிராந்தியங்களை  சேர்ந்த  15-29  வயதிற்குட்பட்ட  இளைஞர்களில், பிராந்தியத்தில்  தலா  ஒருவருக்கு  ஆண்டுதோறும்  சிறந்த இளைஞர் விருதினை  காமன்வெல்த்  அமைப்பு  வழங்கி  வருகிறது.

அதாவது,  தத்தமது  நாடுகளில்  வறுமை,  பாலின சமத்துவம்,  தூய நீர்,  கல்வி,  சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம்  போன்வற்றில்  நீடித்து  நிலைக்கும் வளர்ச்சி  இலக்குகளை  கொண்டு  செயல்பட்டு,  சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை  ஏற்படுத்தும்  இளைஞர்களுக்கு  இந்த  விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ என்னும்  தன்னார்வ  தொண்டு அமைப்பின்  நிறுவனரான  பத்மநாபன்  கோபாலனுக்கு,  ஆசிய பிராந்தியத்தில்  இந்தாண்டுக்கான  சிறந்த  இளைஞர்  விருது  நேற்று (புதன்கிழமை)  லண்டனிலுள்ள  காமன்வெல்த் அமைப்பின் தலைமையகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இவ்விருதினை வென்றவர் தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் ஆவார்.

25  வயதே ஆன இவர் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ என்னும் அமைப்பை நடத்துகிறார். தமிழகத்தின் 16 நகரங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர விழாக்களில் சமைத்து  மீதமாகும்  உணவைப் பெற்று, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு விநியோகிக்கும்  செயலை செய்கிறது இவருடைய அமைப்பு. மேலும் விருது பெற்ற இளைஞரிடம் இது பற்றிய கேள்வி கேட்டபோது, தன்னுடைய கல்லூரி படிப்பிலிருந்தே இதற்கான செயலில் தன் ஈடுபட்டதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அமைப்பை விரிவு படுத்தியதாகவும் சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *