ஐபிஎல் தொடரில் கடந்த திங்கள் அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ராஜஸ்தான் வீரர் பட்லரை மண்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ரவிசந்திரன் அஸ்வின் ஜோஸ்பட்லரை விதிமுறைகளின் படிதான் மண்கட் முறையில் ஆட்டமிழக்க செய்து உள்ளார். இதில் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் அஸ்வின் எச்சரிக்கை செய்து இருக்கலாம். அவர் அதை தேர்வு செய்யவில்லை. ஆனால் இதை மட்டும் வைத்து அவர் நடத்தையை கேள்வி குறியாக்குவது தவறு. அவர் யாரையும் ஏமாற்றவில்லை. அதை செய்ததால் அவர் கெட்ட மனிதரும் அல்ல என கூறியுள்ளார்.