அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த ஹாக்கி தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா கனடாவை சந்தித்தது.
இந்த போட்டியில் 7_3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய வீரர்கள் மந்தீப் சிங் 3 கோல்களும் அமித் ரோஹிதாஸ், வருண் குமார், விவேக் பிரசாத், நீலகண்ட ஷர்மா தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி போலந்தை சந்திக்க உள்ளது.