உலக ரசிகர்களால் அன்பாக “தல” என அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தனது “விஸ்வாசம்” படத்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளார்கள். இதை சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் அஜித் அவர்கள், நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். டைரக்டர் சிவா & அல்டிமேட் ஸ்டார்க்கு இது நான்காவது படமாகும். இருவரும் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இப்படத்தில் அவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இமான் அவர்கள் அஜித்துடன் இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதால் மிக சிறப்பாக செயல்பட்டு இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படத்தை தியாகராஜன் அவர்கள் சத்திய ஜோதி பிலிம்ஸ்சார்பில் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.மாபெரும் வெற்றி அடைய தமிழர்நேரலை சார்பாக வாழ்த்துக்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜித் படப்பிடிப்பு நிறைவு
