இந்திய பிரதமர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இன்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஜி20 மாநாடு அர்ஜென்டினாவில் நடைபெற உள்ளது. வெளிநாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடுவதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாநாட்டில் முக்கியமாகச் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.
இம்மாநாட்டில் பல்வேறு உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதியுடன் மாநாடு முடிகிறது.
பிரதமர் மோடி அவர்கள் 2-ம் தேதி தாயகம் திரும்புகிறார். முக்கியமாக இம்மாநாட்டில் அமெரிக்க அதிபரும், பிரான்ஸ் அதிபரும் கலந்து கொள்ளுவதால். மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது.