அரைவேக்காடு சித்து

பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ள சித்து தற்பொழுது அடிக்கடி பொறுப்பற்ற பேச்சுகளை பேசி வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்க்கும், இந்தியாவில் உள்ள பஞ்சாப்க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டதற்கு தேவை இல்லாமல் தமிழகத்தை குறை கூறியுள்ளார். தாம் தமிழகம் சென்றால் இட்லி தான் சாப்பிட வேண்டும். அது எனக்கு பிடிக்காது, நீண்ட நாட்களாக சாப்பிட முடியாது. அந்தக் கலாச்சாரம் முற்றிலும் வேறு, மொழி பிரச்சனை இருக்கிறது என்றும், கலாச்சாரமும் சிறப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இரண்டு பஞ்சாப்க்கும் வித்தியாசம் கூட தெரியாத சித்து போன்றவர்களை என்னவென்று சொல்வது.

அமைச்சர் சித்து அவர்களே நாங்களும் இதே நிலைதான் அனுபவிக்கிறோம். என்பதை புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கும் உங்களது உணவு பழக்க வழக்கம் கலாச்சாரம், மொழி கஷ்டமாக உள்ளது. ஆனால் நாங்கள் குறை கண்டு பிடிக்கவில்லை, அதை அனுபவமாக பார்க்கிறோம். நீங்கள் சோதனையாக பார்க்கிறீர்கள் கலாச்சாரம் ஒன்று என்றால் எல்லைக்கோட்டில் எதற்கு இத்தனை பாதுகாப்பு, இவ்வளவு செலவு, தீவிரவாதிகள் எங்கிருந்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்தா அல்லது உங்கள் பாகிஸ்தானில் இருந்தா உங்களது அரைவேக்காடு அறிவை கிரிக்கெட்டில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

உங்களது கலாச்சாரத்தை விட எங்களது கலாச்சாரம், பண்பாடு, உணவு எல்லாவற்றிலும் சிறந்தது என்பதை உலகம் அறியும். எப்படி விடையளிக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

அரைவேக்காடு சித்து அவர்களே உங்களுக்கு உணவு பிரச்சினையில்லை. அப்படி என்றால் தமிழ்நாடு வாருங்கள் பஞ்சாபி உணவு வேண்டும் என்றால் எங்களிடம் கூறுங்கள் நாங்கள் எங்கு கிடைக்கும் என கூறுகிறோம் நீங்கள்தான் சகலமும் அறிந்தவராயிற்றே கூகுள் மூலம் வலைதளங்களில் தேடித் தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு எங்கள் கலாச்சாரத்தை பார்த்தால் பயம். தேவையில்லாமல் கலாச்சாரத்தை பற்றி பேசி உள்ளீர்கள் யாருக்கு ஆதரவாக இவ்வாறு பேசுகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும் தீவிரவாதத்தின் தலைமையகத்தை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை நாங்கள் பலமுறை அறிவோம். தீவிரவாத கூட்டத்தின் அழைப்பை ஏற்று சென்று வந்ததிலிருந்து உங்களது அறிவுக்கண் விரிவடைந்துள்ளது. உயர்ந்த வாழ்க்கை, உயர்ந்த பதவி தரமற்ற பேச்சின் மறு உருவம் என்பதை நாங்கள் மட்டுமல்ல உங்களுக்கு சோறும், புகழும் கொடுத்த கிரிக்கெட்டு உலகமும் கூட நன்கு அறியும்.

கேட்ட கேள்வி வேறு சொன்ன பதில் வேறு இதுதான் அரைவேக்காடு சித்து என்பது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *