அமெரிக்கா அதிபர் டிரம்ப் தற்போது பிரான்சில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு பிரச்சனைக்கள் குறித்து பேச உள்ளார். அதற்கு முன்பாக உலகப் போர் நினைவுதின விழாவில் பங்கேற்றார். அப்போது அங்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்தது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது கார் முன்பு ஒரு பெண் தனது மேலாடையை கழட்றி அரைநிர்வாணாத்துடன் கூச்சலிட்டார். அவரைத் தொடர்ந்து இன்னொரு பெண்ணும் இவ்வாறு செய்தார். இதனால் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது தெரியாமல் திகைத்தனர். பிறகு சுதாரித்துக் கொண்டு இருவரையும் தனது வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.