அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்?

ஓய்வூதிய சீரமைப்புக் குழு பரிந்துரையின்படி அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற தொழிலாளர் நல சங்க பொதுச் செயலாளர் வி.கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 76,000 பேர் ஓய்வூதியதாரர்களாக உள்ளனர். 1998 செப்.1-ம் தேதி முதல் அமலில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் இருந்து இன்று வரை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பிஎஃப், கிராஜுடி, விடுப்பு சம்பளம், கம்முடேஷன் போன்ற ஓய்வுகாலப் பலன்கள் ஏதும் வழங்கப்படவில்லை.
எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டுமெனில், ஓய்வூதிய சீரமைப்புக் குழு பரிந்துரையின்படி அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *