அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. கன்சோர்டியம் ஆப் அக்ரடீடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன், மருத்துவ கல்வி இயக்குநரகம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அப்பயிற்சியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி
