முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பெண்களின் சிறப்பினையும் உரிமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் நாள் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. சிறப்புமிக்க பெண்களின் வாழ்வு மேன்மையுற பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)
பெண்களின் உரிமைக்காகவும், கல்வி, வேலை வாய்ப்பு, வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், எவ்வித சமரசமும் இன்றி ஈடுபடுவோம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)
உலக மகளிர் தினத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவரான கிளாரா ஜெட்சின் கூறியது போல் பெண்களின் திறனும், வெற்றியும் தடைகளை தாண்டி நாள்தோறும் வெளிப்படும்.
தமிழிசை(தமிழக பாஜக தலைவர்)
மனதளவில் கூட பெண்கள் மீதான மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம்.
விஜயகாந்த்(தேமுதிக தலைவர்)
தேமுதிக சார்பாக இதுவரை பல நலத்திட்டங்கள் பெண்களுக்காக செய்யப்படுள்ளது. பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள அனைவரும் உறுதியேற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் ஆற்றும் பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பெண் இனம் பாதுகாக்கப்பட வேண்டும். பெண் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.