சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வரும் நவம்பர் 25-ல் தாம் அயோத்தி செய்வதாகவும்,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ராமர் கோவில் கட்டுவதாகக் கூரிய மோடி ஏன் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.அப்படி செய்யாவிட்டால் வரும் காலங்களில் மக்கள் தூக்கி எறிவார்கள் எனக் கோபத்துடன் கூறினார்.
அடிக்கடி ராமரை வணங்கும் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்து ஆர்வலர்கள் இன்று மீது எடுக்கப்படும் நடவடிக்கை கைவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறோம். ஹிந்துத்துவம் இறக்கவில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.