அம்மா ஸ்கூட்டர் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ. 25000 அல்லது ஸ்கூட்டர் விலையில் 50% வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தினை தமிழக அரசு துவங்கியது. இந்த ஆண்டில், இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் ஜூலை 7 ஆம் தேதி வரை மட்டுமே.
மானிய ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும் இருப்பது அவசியம்.
ஓட்டுநர் உரிமம் கட்டாயம் அவர் பெற்றிருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது போன்றவை ஆகும். மானிய ஸ்கூட்டரை பெற http://www.tamilnadumahalir.org/tnatws.html என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போதுஇணைக்கப்படவேண்டியஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. ஒட்டுநர் உரிமம்/எல்.எல்.ஆர்,
3. இனச் சான்றிதழ்
4. கல்வி தகுதி சான்று
5. பணிபுரிவதற்கான சான்று
6. பணி புரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஊதியச் சான்று/ சுய தொழில் மூலம் பெறும் வருவாய்க்கான சுய அறிவிப்பு சான்று
7. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
8. பணிபுரியும் நிறுவனத்தி அடையாள அட்டை
9. வாகனம் வாங்குவதற்கான விலை பட்டியல்
10. வரிசை எண் 23இல் குறிப்பிட்ட முன்னுரிமை வகையினருக்கான சான்று