அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர்,நாகபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாகபட்டினம் தொகுதியில் அமமுகவின் வேட்பாளர் செங்கொடி அவர்களுக்கு வாக்குகள் சேகரித்த தினகரன் அவர்கள் எத்தனை ஊர் சுற்றி வந்தாலும் நான் பிறந்த மண்ணிற்கு வரும் போது பெருமையாக உள்ளது. எனது தாய், நமது தியாக தலைவியின் ஊர் திருத்துறைப்பூண்டிதான். எனது பெயரில் உள்ள முதல் டியே திருத்துறைப்பூண்டிதான்.
அம்மாவின் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நாம் கஷ்டபட்டு நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்ற சின்னம் பரிசு பெட்டகம். நம்மால் பலன் அடைந்த துரோகிகளிடம் இருந்து அம்மாவின் தொண்டர்களே காக்கவே நான் போராடி வருகிறேன் எனவும் தெரிவித்து உள்ளார்.