
அமேசானில் வேலைவாய்ப்பு !!!
அமேசான் இந்தியா பகுதி நேர டெலிவரி வேலைக்கான அறிவிப்பை செய்துள்ளது. இதனை அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையினை பகுதிநேரமாக செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதன் மூலம் மணிக்கு ரூ.140 சம்பாதிக்க முடியும். உங்களின் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
அமேசான் ஃப்ளெக்ஸில் இணைய விரும்பினால் அதற்கான ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் அவசியம் தேவை. அல்லது மூன்றோ நான்கு சக்கரம் வைத்திருக்கிறீர்களா என்பதை குறிப்பிட வேண்டும். ஆண்ட் ராய்டு மொபைல் கட்டாயம் தேவை. ஆண்ட்ராய்டு ஃப்ளெக்ஸ் ஆப் ஆண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த திட்டம் தனி நபர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையினை வழங்கி சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.