அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடுமையான பொருளாதார நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ஈரானுடன் யாரும் எந்த விதமான பொருளாதார உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். அப்படி உறவு வைத்தால் அவர்கள் மீதும் பொருளாதார தடைவிதிக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனால் திடீரென 8 நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்போவதாகத் தெரிவித்து உள்ளார். அவற்றில் இந்தியாவும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய்யில் ஈரானில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். என அமெரிக்கா தெரிவித்துள்ளது