அமெரிக்காவில் தற்பொழுது பனிக்காலம் ஆகும். அங்குக் கடுமையான பனிப்புயல் வீசியது. இதன் தாக்கமாக 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனிகட்டிகளின் அளவு 5 அங்குலம் அளவிற்க்கு உள்ளது. அது மேலும் 10 அங்குலம் அளவிற்குப் படர வாய்ப்பு உள்ளது.
சில மாநிலத்தில் 12 அங்குல அளவுக்குப் பனி புயல் வீச வாய்ப்பு உள்ளது.
1500 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.15,000 விமானங்கள் தாமதமாகச் சென்றன.
பனிப்புயலின் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் துவக்கத்தில் இவ்வாறு பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் கவலை அடைந்துள்ளனர். டிரம்ப் நிர்வாகம் தனது பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது.