அமெரிக்காவின் வேஷம் வெளுத்தது

மீண்டும்! தான் ஒரு நல்ல பிஸ்னஸ்மேன் என்பதை அதிபர் டிரம்ப் நிரூபித்து உள்ளார். பணம் முக்கியம்! நியாயம், நியதி கோட்பாடுகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

ஆனால் அனைத்து நாடகங்களுக்கும் விடை கிடைக்கும் சற்று பொறுத்து இருக்க வேண்டும் என்பதை காலம் உணர்த்தி உள்ளது.

பத்திரிக்கையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனையும், அமெரிக்காவின் நடவடிக்கையும் உலகம் அறிந்ததே! ஆரம்பத்திலிருந்து வெளியில் கூச்சல் போட்ட டிரம்ப் சில நாட்களாகப் பின்வாங்க ஆரம்பித்தார்.

இப்பொழுது சவூதி இளவரசர் ஆலோசனை பெயரில் தான் கொலை நடந்து உள்ளது. அதன் பிறகு ஆடியோ பதிவில் அப்பட்டமானது சவூதி இளவரசரின் பங்களிப்பு உலக நாடுகள் பலவும் வெறுக்கும் நாடாக உள்ள சவூதி அமெரிக்காவுக்கு மட்டும் நட்பு நாடாக உள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாக நேற்று டிரம்ப் “சவூதி அரசு நமது நம்பகமான கூட்டாளி” என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு கொலை சம்பந்தமான ஆடியோவை கேட்க விருப்பமில்லை ஏனென்றால் அது அபாயகரமானது என்று சிறுபிள்ளை போல் பேட்டியளித்தார் அமெரிக்க அதிபர்போல் பேசவில்லை.

அதன் பிறகு இப்பொழுது “நம்பகமான கூட்டாளி” என்று வெட்கம் இல்லமால் பேசியுள்ளார்.

“ஜமால் கசோஜியின் காதலி கூறிய கூற்று உண்மை என்பது தெளிவாகி உள்ளது.

அவர் கூறியதாவது “தன்னை அழைப்பது அமெரிக்க மக்களின் மனதை மாற்றுவதற்க்கே” என்பதை தெளிவாகத் தெரிவித்து இருந்தார்.

மொத்தத்தில் உலக வல்லரசு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவுக்கு வெட்ககேடான விஷயம். ஆனால் எதையும் அவர்களது  சொந்த லாபத்துக்கே முன்னுரிமை அளிப்பார்கள் என்பது உண்மை.

சவூதி அரசு இதற்குக் கைமாறாகப் பல பில்லியன் டாலரை அமெரிக்காவில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அனைத்து கொலைகளும் பணம் இருந்தால் மறைக்கலாம் என்பதே உண்மை.

இதற்க்கு முன்பு நீண்ட நாட்களாக வெளிவந்த உண்மையை மறைத்து வந்த சவுதி அரசு  மக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளான சவுதி அரசு இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து உள்ளது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.

இன்று சவுதி அரசு வெளியிட்ட அறிக்கையில் நிருபர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. கொலை சம்பந்தமாக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 5 பேர் விசாரணைக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்வளவு நாட்கள் எதுவும் தெரியாது எங்கே இருக்கிறார் என்று தேடுவதாகக் கூறிய அரசு இவ்வளவு கேவலமான வேலையைச் செய்து உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும்உலக நாடுகளின் தலைமையின் அழுந்தம் காரணமாகவே ஒத்துக்கொள்வதாகத் தெரிகிறது.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகந்திற்கு வந்ததாகவும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் கொல்லப்பட்டிருக்கிறாரெனப் பொறுப்பற்ற செய்தியைக் கொலைகார சவுதி அரசுச் அறிவித்திருத்தது

இதற்க்கு முன்பு சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் கசோஜி இவர் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இவர் சிறந்த பத்திரிக்கையாளர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் உள்ள இந்தியான பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
இவர் சவுதி அரசுக்கு எதிராகப் பலமுறை கருத்துக்களை பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளார்.
அந்தக் கருத்துக்களால் சவுதி அரசு அவர்மீது கோபம் கொண்டு இருக்கலாம். என நம்பப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா பொதுச் செயலாளர் இது போன்ற சம்பவங்களுக்குச் சிறந்த தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது இப்போதைக்கு எந்தத் தடையும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் தண்டனை உண்டு எனத் தெரிவித்து இருத்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *