டிரம் பதவியேற்றத்திலிருந்தே முந்தய அரசுகளின் கொள்கைகளிலிருந்து வேறுப்பட்டு நடந்து வருகிறார். எங்கு லாபம் வருகிறதோ அங்கு எல்லாம் தான் வல்லரசு எனக் காட்டிகொள்கிறார்.
ஆனால் சிரியாவில் லாபத்துக்கு வழியில்லை என்பதை உணர்ந்து உள்ளார். தேவையற்ற செலவு, உயிர்சேதம் போன்ற வற்றைத் தவிர்க்க விரும்புகிறார். தனது பெரியண்ணன் முடிவில் இருந்து மாறுப்பட்டுத் தனது படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்தது நல்ல முடிவுதான்.
ஆனால் ஏகாதிபத்திய அமெரிக்கா மனோபவத்துக்கு எதிரானது அல்லவா அதனால் தான் இவ்வளவு விமர்சனங்கள்.
அமெரிக்காவின் தலையிட்டால் எத்தனை நாடுகளின் தலையெழுத்தே மாறியது என்பதை உலகம் நன்கு அறியும், அமெரிக்க அதிபர்கள் அனைவருமே நீண்ட காலப் பயன்பாட்டிலிருந்து யோசித்ததின் விளைவாக இன்றும் தனது அந்தஸ்த்தை இழக்காமல் உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் சில நாடுகளுடனா போரினால் செல்வங்களை இழுந்தும், பெற்றும் உள்ளார்கள் என்பதே கடந்த கால வரலாறு.
அமெரிக்கா அதிபர்களில் டிரம்ப் சற்று வித்தியாசமானவர் தனக்கு எது லாபம் தருமோ அதை மட்டுமே செய்கிறார். தேவையற்ற ஈடுபாடுகளைக் குறைத்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்த நினைக்கிறார். அதன் வெளிப்பாடு இது. உலகில் ஏதேனும் தவறு நடத்தால் யார் தட்டிக் கேட்பது என்ற கேள்விக்கே இடம் இல்லை.
முந்தைய காலங்களில் கூட அமெரிக்கா தனது லாபம், ஈகோவுக்காக மட்டுமே அடுத்த நாடு விவகாரங்களில் தலையிட்டது என்பதே உண்மை.
டிரம்ப் அவர்களின் முடிவு ஏற்க்க தக்கது தான் இதன் மூலம் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்படுவதை விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.
எல்லா நாடுகளின் மீதும் இதே போக்கை கடைபிடித்தால் உலகம் முழுவதும் பாதிப் பிரச்சினைகள் தீரும். எங்கள் குடும்பத்தை அதாவது அமெரிக்கர்களைப் பாதுகாத்தால் போதும் என்று அவர் உணர்வது போல் உள்ளது.
அமெரிக்காவின் மீது குற்றசாட்டு உண்டு அதாவது தனது புதிய, பழைய ஆயுதங்களை எல்லாம் பரிச்சோதனை செய்வதற்காகவே பிறநாடுகளின் மீது போர் தொடுப்பார்கள் என்பது. இப்போது சிரியாவில் சோதித்து பார்த்து விட்டதாகவே தோன்றுகிறது. அங்கு பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படப்போவதும் அப்பாவி மக்கள் மட்டுமே என்பதே உண்மை.