அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா முடிவு
இந்தியா கடற்படையை பலப்படுத்ததும் வகையில் அமெரிக்காவிடம் ரூபாய் 17,500 கோடி மதிப்புள்ள கடற்படை ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவிடம் லாக் கிட் மார்ட்டின் சிகோர்ஸ்கை எம் எச் -60 ஆர் வகையை சேர்ந்த 24 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளது.
இதன் மூலம் கடற்படையின், கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும். அமெரிக்க அரசின் வெளியுறவு ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் வாங்கப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர்கள், வாங்குவது குறித்து இரு அரசுகளும் நேரடியாக பேசி முடிவு செய்யும். தற்போது கடற்படையில் உள்ள சீகிங் 42/42ஏ வகையை சேர்ந்த ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.