அமமுகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம்  உத்தரவிட்டது.

இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தரப்பில் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவிற்கு பரிசுபெட்டி சின்னம் வழங்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து அமமுக வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் வழங்கபட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *