அப்ரூவராக மாற ரெடி?

காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் நிறுவனம் வெளிநாடு முதலீடுகளை பெறுவதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்கி தந்த தாகவும் அதற்கு பணம் பெறப்பட்ட தாகவும் புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் அந்நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் மேலும் வலுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *