அபிநந்தனை கேலி செய்யும் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்

இந்தியா-பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனிடையே, அபிநந்தன் தங்கள் வசம் சிக்கிக்கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எழுப்பிய கேள்விகளுக்கு, மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அந்தப் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர்  அந்த வீடியோவில்  டீ நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு டீ கப்புடன் செல்வார். அப்போது, ஒருவர் கப்பை வைத்துவிட்டு செல்லுமாறு கூறுவார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *