அனுபவத்தை சமாளிக்குமா இளமை?

இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்  துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.சென்னை அணி பெங்களுர் அணியையும், டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியையும் தன் முதல் போட்டியில் விழ்த்தி உள்ளன.

சம பலம் பொருந்திய இரண்டு அணிகள் களத்தில் சந்திப்பதால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பை இந்த போட்டி ஏற்படுத்தி உள்ளது.அனுபவம் வாய்ந்த கேப்டன் டோனி மற்றும் அவரது அணியினர் கொடுக்க போகும் சவால்களை இளம் டெல்லி அணியினர் எப்படி சமாளிக்க போகிறார்கள் என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்த ஐபிஎல்லில் இளம் வயது கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் என்பது குறிப்பிடதக்கது. பேட்டிங்க்கு சாதகமான பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில ரன் மழையை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *