C-Voter and ABB செய்திநிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் பெரும்பாலன இடங்களைக் கைப்பற்றுகிறது.
ராஜஸ்தானில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 142 ஐ காங்கிரஸ் கைப்பற்றுகிறது.யார் முதல்வராக வர வேண்டும் என்பதில் 27 சதவீதம் பேர் அசோக்கெலாட் எனவும்,சச்சின்பைலட் 32 சதவீதம் பேரும், 23 சதவீதம் பேர் வசுந்தரா ராஜே எனவும் தெரிவித்து உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 122 இடங்களை காங்கிரசும்,108 இடங்களை பாரதியஜனதாவும் கைப்பற்றும் என தெரிவிக்கிறது. மொத்தம் 230 தொகுதிகள் ஆகும்.
தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக BJP-க்கு அமைந்து உள்ளது.வேலைவாய்ப்பு இன்மை பிரச்சினையும் காரணமாக அமைந்து உள்ளது.
சத்திஸ்க்கரில் 47 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவித்து உள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் ஆகும்.
இந்த மாநிலங்களுக்கு நவம்பர் 12-ல் ஆரம்பித்து டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் முடிவடைகிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 11-ல் எண்ணப்படுகிறது.