அதிர்ச்சி முடிவுகள்?

ஐந்து மாநிலகளுக்கான தேர்தலினை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து முடித்தது.
அதில்  சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா தேர்தல் முடித்தது.

மத்தியபிரதேசம் ராஜஸ்தான் சட்டீஸ்கர்
பா.ஜ.க காங்கி பா.ஜ.க காங்கி பாஜக காங்கி
டைம்ஸ் நவ் 126 89 86 105 39 45
இந்தியா டூடே 102-120 104-122 55-72 119-141 21-31 55-65
நியூஸ் எக்ஸ் 106 112 80 112 43 40
சிவோட்டர் 90-106 110-126 52-68 129-145 35-43 42-50
ரிபப்ளிக் டி.வி 108-128 95-115 83-103 81-101 40-48 37-43

 

தெலுங்கானா மிசோரம்
பா.ஜ.க காங்கி டிஆர்எஸ் காங்கி எம்என்எப்
டைம்ஸ் நவ் 07 37 66       —       —
இந்தியா டூடே 1-3 21-31 79-91    8-12 16-22
நியூஸ் எக்ஸ் 06 46 57     —      —
சிவோட்டர் 1-11 47-59 48-60 14-18 16-20
ரிபப்ளிக் டி.வி 4-7 38-52 50-65    —   —

மத்திய பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குபதிவில் அதிகபட்சமாக 75% வாக்குபதிவு நடத்துள்ளது.கடந்த தேர்தலைவிட 2.5% சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 2907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 230 தொகுதியாகும். பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 229 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.

ராஜஸ்தானில் மொத்தம் 2,247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 200 தொகுதியாகும். இதில் பகுஜன் சமஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திடிர் மரணம் அடைத்தால் அந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 119 தொகுதியாகும் இந்தத் தொகுதியில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

நேரியிடையான போட்டி கங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் தான் உள்ளது.
பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாரதபிரதமர் மோடி அவர்களும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வந்தார்கள்.இதற்கு இடையில் தேர்தல் முடிந்தவுடன் நடந்த கருத்து கணிப்பில் மாறுப்பட்ட தகவல்கள் வந்துள்ளன. உண்மையான நிலவரம் டிசம்பர் 11 தேதி தெரியவரும்.

ஐந்து மாநிலக்களில் வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 11 தேதி நடைப்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *