ஆண்களுக்கு மட்டுமே எதிராகப் புகார் அளித்து வந்த பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இன்னொரு பெண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றச்சாட்டு இந்தியத் தியேட்டர் நிறுவனமான த லிட்டில் தியேட்டரில் உறுப்பினராக இருந்த அனன்யா ராம்பிரசாத் அவர்கள் மாயா மீது குறை கூறியுள்ளார்கள். அதன் விவரம் பின்வருமாறு.
தனது பேஸ்புக் பதிவில் இந்தப் பதிவை இயற்றியுள்ளார்.
மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
“நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். அவரை 2016-ல் சந்தித்தேன். . தனது 18 வயதில் முதன்முறையாக அவரைச் சந்தித்ததாகவும் அப்போது அவருக்கு வயது 25 மிகவும் மரியாதையுடன் அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்தச் சில மாதங்களில் இருவரும் நெருக்கமாகப் பழகினோம்.
ஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுக்கத் தொடங்கினார். என்மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினார். மெதுவாக எனது நண்பர்களைத் துண்டித்து அவர்கள் என்னை வெறுக்கச் செய்தார். எனது பெற்றோர்களையும் ஒதுக்கச் செய்தார்.
கொண்டதாகவும் தனக்கு ஆலோசனை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நட்பானது தன்னை மிகவும் தர்மசங்கடத்திற்கு ஆளாகிய தாகவும். வேறு யாரையும் நெருங்க முடியாத அளவிற்கு இருவருக்குள்ளும் உலகம் சுருங்கி போனதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்தச் சில மாதங்களுக்குப் பிறகு அவர் மீது அதிக நம்பிக்கை வந்ததாகவும். மாயா தன்னைத் தனது தவறான நடவடிக்கை மூலம் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன். என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார். என்னைக் கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார்.
தன்னைப் பலமுறை தனது இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவும். தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு யாரும் நெருங்க முடியாத அளவிற்குக் கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை மொத்தமாகப் பாதித்தாகவும் தெரிவித்துள்ளார். அவருடன் பழகிய நாட்கள் மிகுந்த ஏமாற்றம் அளித்தாகவும் மிகவும் அதி பயங்கரமாகக் காட்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண விஷயமானது. ஒரு கட்டத்தில் தவறாகச் சிக்கியதை உணர்ந்தேன். பிறகு அதில் இருந்து மீண்டு வர மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்.”
அதிர்ச்சி பாலியல் புகார்?
