நேற்று பார்படாஸில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வென்று அதிர்ச்சி அளித்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்தது 289 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீட்மையர் 83 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
அடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்டோக்ஸ் 79 ரன்களும், மோர்கன் 70 ரன்கள் எடுத்தும் பலன் எதும் அளிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கோட்ரேல் 5 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும் கைபற்றி அசத்தினர்.