அதிரடி வீரர் சேவாக் எச்சரிக்கை

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் “சேவாக்” ஆஸ்திரேலிய குறித்து இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோலி தலைமையிலான இந்திய அணி வருங்காலங்களில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் ஹோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளதாகவும். எந்த அணியையும் வெற்றி பெறக் கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அவர்கள் இதே நினைப்பில் ஆஸ்திரேலியா செல்லக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியில் சுமித் மற்றும் வார்னர் இல்லாததால் அந்த அணி பேட்டிங்கில் சற்று வழங்குவதாக நினைக்கப்படுகிறது. ஆனால் அது தவறு என சேவாக் எச்சரித்துள்ளார். மேலும் தற்போதைய புதிய வீரர்கள் ஏற்கனவே உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்றும் மேலும் அதிக ரன்களை குவித்து உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனவே கிரிக்கெட் வாரியமும் அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால்தான் வெற்றி பெற இயலும் என இந்திய அணிக்கு அலாரத்தை அடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *