மறைந்த தி.மு.க-வின் முன்னால் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை நாளை(16-12-2018) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திறப்பு விழா நடைப்பெறுக்கிறது. இதில் பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
அதன் பிறகு மாலை 5.30 மணிக்கு சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையும், அறிஞர் அண்ணா சிலையும் திறந்து வைக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள இருக்கிறார். அவரை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் அவர்கள் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.