
அடுத்த ஆண்டுமுதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.. யூ.கே.ஜி வகுப்புகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடத்த விழாவில் கலத்துகொண்ட கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அந்த விழாவில் கே.சி கருப்பணன் மற்றும் மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் மேலும் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய யூனிபார்ம் மற்றும் பாடபுத்தகம் வழக்கப்படும் என அறிவித்தார்.
அடுத்த ஆண்டுமுதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையினை அதிகப்படுத்த எல்.கே.ஜி.. யூ.கே.ஜி வகுப்புகள் தொடக்கப்படும் மற்றும் 9-முதல் 12-வரை இண்டர்நெட் கூடிய கம்பியூட்டர் வசதி செய்யப்படும். மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழக்கப்படும் என அவர் அறிவித்தார்.