அடிலெய்டு நாயகன் புஜாரா

புஜ்ரா என்ற பெயர் அடிலெய்டு டெஸ்ட்க்கு பிறகு கிரிக்கெட் உலகமே உச்சரிக்கிறது. இதற்க்கு முன்பாகப் பலமுறை திறமையை நிருபித்து இருந்தாலும் அவரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அவருக்கு ஆஸ்திரேலியா தொடரில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி கூட எழுந்தது. ஆனால் அடிலெய்டில் அவரது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் யார் என்பதை நிறுபித்து இந்திய அணியினை மோசமான நிலையில் இருந்து மீட்டு எடுத்த தற்கால, கற்காலக் கிரிக்கெட் கலையின் நாயகன். அவரது ஒவ்வொரு அசைவுகளும், ரன்களும் பாடம் எடுப்பது போல் இருந்தது.

பிட்சில் நிற்பதே கஷ்டம் என்ற ஆஸ்திரேலிய மைதானத்தில்  மட்டையும் போட்டர். ஒரு ரன் எடுப்பதே கஷ்டம் என்ற நிலையில் ஒவ்வொரு ரன்னாகச் சேர்தார், பவுண்டரி அடிப்பது கஷ்டம் என்றால் அதையும் அடித்துக் காட்டினார். சிக்ஸராவது அடிப்பாதவாது என்ற நிலையில் சிக்ஸரும் அடித்துக் காட்டினார். இதுதான் புஜ்ரா.

ஆனால் இந்த விளம்பர உலகத்தில் சிக்காத இல்லை..இல்லை. கண்டு கொள்ளாத புஜ்ராவை இப்பொழுது தலையில் துக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அவர் செய்த பயிற்சி என்ன என்பதை வெளியிட்டார்களா என்றால் இல்லை. உண்மையான திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு என்றும் மறைக்க இயலாது. இப்பொழுது வெளிஉலகுக்குத் தெரிந்து விட்டது. உலகின் அனைத்து முன்னனி நாடுகளின் தலைப்புச் செய்திகளில் புஜ்ரா சதத்தைப் பற்றிய பகிர்வு அற்ப்புதமான, சுவராசியமான தகவல்கள், பாராட்டுகளைக் குவித்துள்ளார்.

பிட்சின் தன்மையை நன்கு உணர்ந்த புஜ்ரா ஆரம்பத்தில் மென்மையைக் கடைப்பிடித்தார். அப்பொழுது பிட்சின் தன்மை கடுமையாக இருந்தது அதவாது பவுலிங்கு சதகமாக இருந்தது.

ஆஸ்திரேலிய பிட்சிகளில் குறைந்தது 30 ஒவர்களாவது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருந்தார். 40 ஒவர்களுக்கு மேல் பேட்டிங்கின் சொர்க்க பூரியாக மாறும் என்பதை உணர்ந்து நிதானத்தைக் கடைப்பிடித்தார்.

இவர் கடுமையான ஷாட்டுகளை ஆடஆரம்பித்தவுடன் பிட்ச் மென்மையாக மாறியது என்ன ஒரு சிறப்பு, அருமை.

இவர் அடித்த ஷாட்டுகள் அனைத்தும் வீடியோ படம் எடுப்பதற்காக அல்ல கிரிக்கெட் வீரர்களுக்குப் பாடம் எடுப்பது போல் இருந்தது அவ்வளவு தெளிவான ஷாட்டுகள்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ச் முடிந்ததும் புஜரா கூறிய வார்த்தைகள் இன்று பலித்துவிட்டது அப்படி ஒரு கணிப்பு. இந்தப் பிட்ச் அஸ்வினுக்குச் சதாகமாக அமையும் , அஸ்வின் ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தொல்லைகொடுப்பார் என அடக்கமகா கூறினார். அதுவும் நடந்து விட்டது.

அவரது ஆட்டத்தை முன்னாள் ஜாம்பவன்கள் மனதார பாராட்டியுள்ளார்கள்.

சச்சின் அவர்கள் கடினமான சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் வாழ்த்துகள். அற்ப்புதமான சதம் மேலும் இந்தத் தொடரில் சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடுங்கள் என உற்சாகப்படுத்தியுள்ளார்.

வி.வி.எஸ்.லெஷ்மணன் அவர்கள் அற்ப்புதமான சதம் கடுமையான சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் அற்புதம் அன தெரிவித்துள்ளார்.

நமது சேவாக் அவர்கள் இந்தச் சதம் மறக்க முடியாத ஞாபகத்தில் நிற்க்கும் எனவும், சவால்களைக் கண்டறிந்து திறம்படச் செயல்பட்டு உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களின் திறமையை ஏற்காத ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஏன் சச்சின் திறமையைக் கூடப் பாராட்ட தயங்கியவர்கள் புஜராவின் திறமையைப் பாராட்டியுள்ளார்கள்.

சூழல் மன்னன் ஷேன் வார்னர் ஆளை ஆக்கிரமிக்கும் சிறப்பான, பிரமிப்பான ஆட்டம் எனவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்..

முக்கியமான லீமன் அவர்கள் அடிலெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த சதங்களில் முக்கியமானது எனவும், மிகுந்த ஆச்சரியம் அற்புதம் எனத் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் கிளார்க் அவர்கள் புஜரா கிளாஸிக் சதம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்க்கு ஒரு படிமேலே போய் அணியில் ஆடி கொண்டி இருக்கும். உலகை தனது வேகபந்து வீச்சில் அச்சுற்றுத்தும் மிட்சல் ஸ்டார்க அவர்கள், அனைத்து பெருமையும் புஜராவையே சாரும். சூழ்நிலையை நன்கு உள் வாங்கிக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப ஆடி அற்புதமான சதத்தை அடைந்து விட்டார். அனைத்து பாராட்டுகளும் அவரையே சாரும் என உள் மனதில் இருந்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

ஐபிஎல்-லில் எந்த அணியும் ஏலம் எடுக்க வில்லை. எந்த வீரரும் சிபாரிசும் செய்யவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கண்டுகொள்ள வில்லை.

அந்தக் காலக்கட்டங்களில் இவர் இங்கிலாந்து சென்று எடுத்த பயிற்சியே இவரைத் தூக்கி நிறித்தி உள்ளது. ஐபிஎல் பணத்தை இழந்தார். ஆனால் இன்று பணத்துடன் உலகப் புகழும் அடைந்தார்.

ஐபிஎல்-லில் சாதித்து இருந்தால் உள்ளூர் செய்தியாக மட்டுமே இருந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் சாதித்து உலகச் செய்தியாக மாறியுள்ளது. புஜராவுக்கு வாழ்த்துகள். திறமையை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது என்பது உண்மை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *